செய்திகள்

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு: போலீஸ்காரர் உள்பட ஐந்து பேர் பலி

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களுக்கிடையே ஆங்காங்கே துப்பாக்கி சூடும், கும்பல்களுக்கிடையே மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
அதேபோன்று நேற்று கட்டேர் பகிச்சா பகுதியில் உசைர் ஸான், பாபா லட்லா என்ற இரண்டு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல்களுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் கோரங்கி தைத் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத சில பேர் மோட்டோர் சைக்கிளில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு போலீஸ்காரர் மற்றும் அவரது நண்பர் உயிரிழந்தனர்.
மேலும், லையாரி என்ற இடத்திலும், மெவா ஷா என்ற இடத்திலும் துப்பாக சூடு நடந்துள்ளது. இதில் சில பேர் காயம் அடைந்துள்ளன