செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இலங்கை

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இப்போட்டியில் நாணயசுழற்சியில்வென்று பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆனால் இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தரிந்துகௌசலின் அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்களில்சுருண்டது. கவுசல்ஐந்து விக்கெட்டும் பிரசாத் மூன்று விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களைஎடுத்திருந்தது. கேளசல் சில்வா 21 ரன்களுடனும்இ சங்கக்கரா 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சங்கக்கரா 34 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த திரிமhனே 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

4-வது விக்கெட்டுக்கு கௌசல் சில்வாவுடன் அணித்தலைவர் மத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சில்வா 80 ரன்களிலும் மாத்யூஸ் 77 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகஇ 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலங்கை அணிக்கு இன்னும் கைவசம் ஒரு விக்கெட் உள்ள நிலையில் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால் இலங்கை அணி பாகிஸ்தானை 2-வது இன்னிங்சில் குறைந்த ரன்னிற்குள் சுருட்ட வாய்ப்புள்ளது. அப்படி சுருட்டி வெற்றி பெற்றால் தொடரை 1-1 என சமநிலைப்படுத்தும்.