செய்திகள்

பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான பெறுமதியுள்ள ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்ய உள்ளது. அதற்கான ஒப்புதலை பெற ‘பென்டகன்’ நிர்வாகம் அமெரிக்க பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதன்படி ஏ.எச்–1 இசட் வைபர் ஹெலிகாப்டர்கள், 1000 ஹெல்பயர் ஏவுகணைகள், அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய துப்பாக்கிகள் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

விற்பனை செய்யப்படும் ஆயுதங்களின் மதிப்பு ஒரு பில்லியன் டொலர்கள் ஆகும். பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மலைப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ராணுவம் அழித்து வருகிறது.

அதற்காக அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.