செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி பாராட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த அற்புதமான வெற்றிக்கு இந்திய அணியினரை வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா.

உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்றதில்லை என்ற பாகிஸ்தானின் சோகம் தொடர்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் 6 முறை தோற்றுள்ள பாகிஸ்தான், டி20 உலகக் கோப்பையில் 5-ஆவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

n10