செய்திகள்

பாகிஸ்தானை வென்றது இந்தியா

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

கோலி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து.

அதனை தொடர்ந்து விளையாடி இந்திய அணி நிதானமாக விளையாடி 15.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்தியாவின் சார்பில் விராட் கோலி சிறப்பாக அரை சதம் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்.

இதன் மூலம் எந்த ஒரு உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது இல்லை என்கிற பெருமை மீண்டும் நிலை நாட்டியது இந்திய அணி

இந்தியா – பாகிஸ்தான் போட்டி  துவக்க விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, பாக் முன்னாள் வீரர்கள் இம்ரான்கான், வாசிம் அக்ரம், இந்திய முன்னாள் வீரர் சச்சின் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இதில் கலந்து கொண்டார்.

உலகக் கோப்பை டி20 போட்டியின் இன்றைய போட்டியில் பரம வைரிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் போத இருந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாகியது. 18 ஓவராக குறைக்கப்பட்டது இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம். டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.. இந்திய அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா? சாவா ஆட்டம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்திய அணியை பொறுத்த மட்டில் இன்றைய வெற்றியை தவிர அனைத்துமே சோக செய்தி தான்.

பாகிஸ்தானுக்கு வெற்றி, மழை இரண்டுமே நல்ல செய்தியாக இருக்கும். 60000 பேர் கூடி இருக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் குறைந்தபட்சம் 6 ஓவர் கொண்ட போட்டியாக இது நடந்தாலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கூறப்படுகிறது.

n10