செய்திகள்

பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரபீல் ஷரீப் இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகள் மற்றும் வலய ஒத்துழைப்பு குறித்தும் மற்றும் நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பாக இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.