செய்திகள்

பாகிஸ்தான் கவர்னரை கொன்றவர் இன்று தூக்கிலிடப்பட்டார்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னரை சுட்டுக்கொன்ற மும்தாஜ் காத்ரி என்பவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் நடைமுறையில் இருக்கும் மத அவமதிப்பு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துவந்த சீர்திருத்தவாதியான பஞ்சாப் மாகாண முன்னாள் கவர்னர் சல்மான் டஸீர் என்பவரை அவரது பாதுகாவலரும் தீவிர மதவாதியுமான மும்தாஜ் காத்ரி கடந்த 4-1-2011 அன்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இந்த கொலை வழக்கில் காத்ரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ராவல்பிண்டியில் உள்ள அடியாலியா சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மும்தாஜ் காத்ரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன