செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வந்துள்ளார்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் அவர் வரவேற்கப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதி, பிரதமரும் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இதன்போது இரு தரப்பு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)