செய்திகள்

பாகிஸ்தான் விசாரணை குழு இன்று இந்தியா வருகை!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து, விசாரணை நடத்த பாகிஸ்தான் விசாரணைக் குழு, இன்று இந்தியா வருகிறது.

பதான்கோட் விமானப்படை தளத்தின் மீது கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் விசாரணைக் குழு அதிகாரிகள் 5 பேர், இன்று இந்தியா வருகின்றனர். இவர்கள் தேசியப் புலனாய்வு அமைப்பின் தலைமையகத்தில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து, பதான்கோட்டுக்கு சிறப்பு விமானம் மூலம் வரும் செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்படுகின்றனர். பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களிடம் பாகிஸ்தான் விசாரணைக் குழு, வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.எஸ்.எஃப், தேசிய பாதுகாப்புப் படை வீரர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

N5