செய்திகள்

பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு

தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், சிறந்த திரைப்படத்துக்கான விருதை பாகுபலி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

63வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த படத்துக்கான விருதை பாகுபலி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

மேலும், இன்று அறிவிக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சனும் சிறந்த நடிகைக்கான விருதுக்கு கங்கனா ரணாவத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு சஞ்சய் லீனா பன்சாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமிதாப் பச்சனுக்கு 4வது முறையாகவும், கங்கனா ரணாவத்துக்கு 3வது முறையாகவும் தேசிய திரைப்பட விருது வழங்கப்பட உள்ளது.

n10

5