செய்திகள்

பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரை கைப்பற்றியது பங்களாதேஸ்

தமீம் இக்பாலின் இரண்டாவது தொடர்ச்சியான சதத்தின் உதவியுடன் பங்களாதேஸ் அணி பாக்கிஸ்தானிற்கு எதிரான ஓரு நாள் போட்டி தொடரை கைப்பற்றியுள்ளது.டாக்காவில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஓரு நாள்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
பங்களாதேசின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஓரு கட்டத்தில் பாக்கிஸ்தான் 5 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்பட்டது.
எனினும் சாட் நசீம் மற்றும் வஹாப் ரியாசின் சிறந்த துடுப்பாட்டம் காரணமாக அணி 239 ஓட்டங்களை பெற்றது.நசீம் 77 ஓட்டங்களையும், ரியாஸ் 51 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடரை கைப்பற்றுவதற்கு 240 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி, 38 ஓவர்களில் தனது வெற்றி இலக்கை அடைந்தது.
தமீம் இக்பால் ஆட்டமிழக்காமல் 116 ஓட்டங்களை பெற்றார்