செய்திகள்

பாக்கிஸ்தானிலிருந்து வெளியாகும் விமர்சனங்களால் அணிக்கு தலைமை தாங்குவது கடினமாகவுள்ளது- மிஸ்பா

பாக்கிஸ்தான் அணி அடுத்த சுற்றில் உலகின் முக்கியமான அணிகளை எதிர்கொள்ள தயாராகிவிட்டதாக அணிதலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

2015 உலககிண்ண போட்டிகளில் இனி எங்களுக்கு இரண்டாவது சந்தர்ப்பம் என்று எதுவுமில்லை,இதன் காரணமாக அடுத்த போட்டிகளுக்கு எங்களை முழுiமாக தயார் செய்து அச்சமற்ற மனோநிலையில் செல்லப்போகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  உலககிண்ணப்போட்டிகள் போன்றவற்றில் முக்கியமான போட்டிகளை வெல்வதற்கு உங்களது பந்து வீச்சு சிறப்பாக அமையவேண்டும்,கடந்த மூன்று போட்டிகளிலும் எங்கள் வேகப்ந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

2011 முதல் பாக்கிஸ்தான் ஓரு நாள் அணியின் தலைமைப்பொறுப்பை வகிக்கும் மிஸ்பா தங்கள்அணி முதலில் அயர்லாந்துடனான போட்டி குறித்து கவனம் செலுத்துவதாகவும்,அதன் பின்னர் அவுஸ்திரேலியாவையோ அல்லது நியுசிலாந்தையோ அடுத்த சுற்றி;ல் சந்திக்க தயார் எனவும் அந்த அணிகளை தங்களால் தோற்கடிக்கமுடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது அணி வீரர்களை அச்சமின்றி, அழுத்தங்களை சந்திப்பதற்கான மனோநிலையுடன் தயராராகயிருக்குமாறு கேட்டுள்ளேன்,அணியின் மத்தியவரிசை துடுப்பாட்டமே கவலைக்குரிய விடயம்,உமர் அக்மல்,ஹரிஸ் சொகையில், போன்றவர்கள் உலக கோப்பை போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தங்களை வெளிப்படுத்துவதற்கான தருணமிது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  பாக்கிஸ்தானிலிருந்து வெளியாகும் விமர்சனங்களால் அணிக்கு தலைமை தாங்குவது கடினமாகவுள்ளது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.