செய்திகள்

பாக்கிஸ்தானில் சர்வதேச போட்டிகள் இடம்பெறாததால் பெரும்பாதிப்பு என இன்சமாம் கவலை

பாக்கிஸ்தானில் சர்வதேச போட்டிகள் 2009 முதல் நடைபெறாததன் காரணமாகவே அங்கு கிரிக்கெட்டின் தரம் வீழ்ச்சியடைந்துவருவதாக முன்னாள் அணிதலைவர் இன்சமாம் உல்-ஹக் வேதனை வெளியிட்டுள்ளார்.
பாக்கிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய நிலை கவலையளிப்பதாகவுள்ளது அனைவரும் இது குறித்து சிந்திக்கவேண்டும்,
15 வருடங்களுக்கு பின்னர் நாங்கள் பங்களாதேசிடம் தோற்றுப்போயுள்ளோம்,எங்கள் கிரிக்கெட் எங்கு சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கான அறிகுறியிது,
பாக்கிஸ்தானில் இன்னமும் பெரும் கிரிக்கெட் திறமையுள்ளது,தற்போது எதிர்காலம் குறித்த சிறந்த திட்டமே அவசியம்.
அடுத்த உலக கிண்ணத்தை நாங்கள் இலக்குவைக்கவேண்டும்,சர்வதேச போட்டிகள் எதுவும் பாக்கிஸ்தானில் இடம்பெறததால் எங்கள் இளம்வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு போதிய அனுபவம் கிடைப்பதில்லை இதனால் அவர்கள் சர்வதேசபோட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்கு சிறிது காலம் எடுக்கின்றது,
சர்வதேச போட்டிகள் இல்லாததால் நாங்கள் உள்ளுர் போட்டிகளுக்கு சிறந்த ஆடுகளங்களை தயாரிப்பதில்லை,
பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை, அரசாங்கம், ஊடகங்கள் முன்னாள் வீரர்கள் உட்பட அனைவரும் இணைந்து பாக்கிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகள் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என இன்சமாம் தெரிவித்துள்ளார்.