செய்திகள்

பாக்கிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக கம்ரன் அக்மல் போர்க்கொடி

உமர் அக்மலை பாக்கிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தினர் பலிக்கடவாக்கியுள்ளதாக அவரது சகோதரர் கம்ரன் அக்மல் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாத காரணங்களுக்காக தனது சகோதரரின் கிரிக்கெட் வாழ்க்கை அழிக்கப்படுகின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உமர் எப்போதும் தனது நலனைவிட அணியின் வெற்றிக்கே முக்கியத்துவமளித்துள்ளார்,ஓழுக்கம் தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் காணப்பட்டால்,இளம் வீரர்கள் தாங்கள் தவறு செய்துள்ளனர் என்பதை உணரும் வகையில் அவர்களை வழிநடத்துவது அணியின் முகாமைத்துவத்தினதும், பயிற்றுவிப்பாளரினதும் கடமை. அவர்களை அணியிலிருந்து விலக்குவது என்பது புத்திசாலித்தனமான நடவடிக்கையல்ல,அணியின் முகாமைத்துவம் குறித்து இந்த ஏமாற்றம் எழுகின்றது,வீரர்களை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதன் மூலமே சிறந்த அணிகளை உருவாக்க முடியும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஸ் அணியுடனான போட்டிகளுக்கு உமர் அக்மல் தெரிவுசெய்யப்படாத குறிப்பிடத்தக்கது . அதன் தொடர்ச்சியாகவே கம்ரன் அக்மலின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உலககிண்ணத்தில் மிகமோசமாக விளையாடிய உமர் அக்மல் குறித்து பாக்கிஸ்தான் அணிதலைவர் மிஸ்பாவும், பயிற்றுவிப்பாளர் வஹார் யூனிசும் முறைப்பாடு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்த கருத்து காரணமாக கம்ரன் அக்மல் மீண்டும் அணியில் இடம்பெறும் வாய்ப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.