செய்திகள்

பாக்கிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் கொக்கைன் பயன்படுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது

பாக்கிஸ்தானின் இளம்சுழற்பந்து வீச்சாளர் ராஸா ஹசன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை தொடர்ந்து அவர் இரண்டு வருட தடையை எதிர்கொள்ளகூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு முகவர் அமைப்பு மேற்கொண்ட பரிசோதனைகளின் போது குறிப்பிட்ட வீரர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது.
இடதுகைசுழற்பந்து வீச்சாளரான ஹசன் பாக்கிஸ்தான் அணிக்காக ஓரு நாள்மற்றும்இருபதிற்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட வீரருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள பாக்கிஸ்தான் கிரிக்கெட் சபை குழுவொன்றை நியமித்துள்ளது.
பாக்கிஸ்தான் வீரர் ஒருவர் கொக்கைன் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவை என்பதால் இந்த விடயத்தை தீவிரமானதாக கருதுகின்றோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.