செய்திகள்

பாக்கிஸ்தான் தற்கொலை குண்டுதாக்குதலில் 15ற்கும்மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பலி

பாக்கிஸ்தானின் லாகூர் நகரில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இரு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அருகில் இன்று இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்,70ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
யுகானாபாத் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

_81657214_4bd69986-0c3c-4e9c-9a51-2c5956fee225
பாக்கிஸ்தானின் அல்ஹைடாவின் ஓரு பிரிவான ஜமாத்துல் அஹ்ரார் என்ற அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.தற்கொலை குண்டுதாரிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்ஜோன்ஸ் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் இன்னெரு தேவாலயத்தின் வாசலில் குண்டுதாரிகள் தங்களை வெடிக்க வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதியில் பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படாதது குறித்து அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதன் பின்னர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு உதவியவர்கள் எனக்கூறி இருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை அவர்கள் அடித்துக்கொலைசெய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதி புகையிரத நிலையத்தையும்,பேருந்து தரிப்பிடத்தையும் தாக்கியுள்ளனர்.
பாக்கிஸ்தான் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளனர்.அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாக்க தவறிவிட்டதை இந்த தாக்குதல் புலப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாக்கிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்குள்ளாவது வழமையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.