பாக்கிஸ்தான் 150 ஓட்டங்களால் தோல்வி
உலக கிண்ணத்தின் இன்றைபோட்டியில் விளையாடிய ஏமாற்றமளிக்கின்ற இரு அணிகளும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு தவறிழைத்தனர்,எனினும் தனது துடுப்பாட்டத்தின் இறுதி 14 ஓவர்களிலும், பந்து வீச்சின் முதல் நான்கு ஓவர்களிலும் ஜொலித்த மேற்கிந்திய அணி போட்டியை வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்த போதிலும்,பின்னர் அடுத்த 14 ஓவர்களிலும் 143 ஓட்டங்களை பெற்று தன்னை பலப்படுத்தியது.ரம்டின்,சிம்மன்ஸ்,ரசல் ஆகியோர் அபாரமாக ஆடினர்.ரம்டின், சிம்மன்ஸ் இருவரும் அரைசதங்களை பெற்ற அதேவேளை ரசல் மிகவேகமான அரைச்சதத்தை பெறுவதற்கு அருகில் நெருங்கி வந்தார்- 13 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றார்.
பதிலுக்கு பாக்கிஸ்தான் துடுப்பெடுத்தாடிய வேளை முதல் நான்கு ஓவர்களிலேயே ஆட்டத்தின் முடிவு புலனாகியது. பாக்கிஸ்தான் 1 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நிலையில் நான்கு விக்கெட்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.டெய்லர் முதல் மூன்று விக்கெட்களையும் கைப்பற்றினாh. இறுதியில் பாக்கிஸ்தான் அணி 160 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பாக்கிஸ்தான் அணியின் மிக மோசமான களத்தடுப்பு
பாக்கிஸ்தான் அணி இன்று களத்தடுப்பில் ஈடுபட்ட விதத்ததை பார்த்தபின்னர் அதன் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் கிரான்ட் லுடென் நிச்சயமாக பொறுமையிழந்திருப்பார்.
பாக்கிஸ்தான் களத்தடுப்பில் என்றும் பிரகாசித்ததில்லை என்கின்ற போதிலும் இன்றை போட்டியில் அதன் நிலைமிகமோசமாக காணப்பட்டது. ஆரம்பத்தில் ஸமித்தின் வாய்ப்பை நசீர் ஜம்செட் தவறவிட்டார்,எனினும் முக்கிய குற்றவாளி அப்பிரிடி என்பது முக்கியமானது.அவர் மார்லன் சாமுவேல்ஸ், பிராவோ இருவரையும் தவறவிட்டார். பின்னர் விக்கெட் காப்பாளராக விளையாடிய உமர் அக்மலும் தனது பங்கிற்கு சாமுவேல்சினை தவறவிட்டார்.