செய்திகள்

பாஜக வில் இணையும் நடிகை ஜெயபிரதா டில்லியில் போட்டி

இந்தியாவின் பிரபல நடிகை ஜெயபிரதா விரைவில் பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவின் சார்பில் புதுடில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் களம் இறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ராஷ்டிரிய லோக்தள் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் தற்போது  பா.ஜ.,வில் இணைய விரும்புவதாகவும், புதுல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜிரிவாலை எதிர்த்து போட்டியிர விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் கட்சி மேலிடம் இதுகுறித்த்து எந்த முடிவும் எடுக்கவில்லை என பா..ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு கட்சியில் இணைந்தால் தெலுங்கு ஆதிக்கம் உள்ள பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயபிரதா, கடந்த மக்களவை தேர்தலில் ராஷ்டிரிய லோக்தள் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.