செய்திகள்

பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகல் இளம் வயது திருமணத்தினை ஊக்குவிக்கிறது

பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகல் என்பது சமூகத்தில் இளம் வயது திருமணத்தினை ஊக்குவிப்பதாக வேல்ட் விசன் நிறுவனத்தின் கிராண் பிரதேச முகாமையாளர் திருமதி ஹிந்து ரொஹாஸ் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் வேல்ட் விசன் நிறுவனமும் இணைந்து நடாத்திய மாற்றத்திற்கான கற்றலுடனான சமூக அபிவிருத்தி இளைஞர்கழக வலுவூட்டல் மூன்று நாள் விதிவிட செயலமர்வு நிகழ்வு இன்று காலை சத்துருக்கொண்டானர் சர்வோதயம் மண்டபத்தில் ஆரம்பமானது.

இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.எம்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் கே.தவராஜா,மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களான கே.கலாவதி,ஏ.நிசாந்தினி,கிராண் பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் த.விந்தியன் உட்பட வளவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேச செயலகப்பிரிவுகளில் ஒன்றான கிராண் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர் யுவதிகள் 42பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சமூகத்தில் சிறந்த தலைமைத்துவத்தினையும் வழிகாட்டிகளைம் உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி நெறி நடாத்தப்படுகின்றது.

“சமூகத்தில் அபிவிருத்தி ஒருவரின் சுயநலமாகவுள்ளபோது அந்த சுயநலம் அனைவருக்கும் ஏற்படுமாயின் அந்த சமூகத்தில் நல்ல மாற்றங்களை காணமுடியும்.ஒருவர் சந்தோசமாக இங்கு இருக்க நினைக்கும்போது அவர்கள் அந்த சந்தோசத்தில் சுயகட்டுப்பாடை பேணுவார்களானால் அது நிலைத்து நிற்கும்”; எனவும் இங்கு கருத்து தெரிவித்த வேல்ட் விசன் நிறுவனத்தின் கிராண் பிரதேச முகாமையாளர் திருமதி ஹிந்து ரொஹாஸ் தெரிவித்தார்.

IMG_0004IMG_0006IMG_0007