செய்திகள்

பாடசாலை கூரைக்குள் இருந்த துப்பாக்கி மீட்பு !

கல்முனை நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தின் உட் கூரைக்குள் (ஊநடைiபெ) இருந்து ரீ-56 ரக துப்பாக்கி ஒன்றை, இன்று காலை மீட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைக் கூரையின் உடைந்த ஓடுகளைச் சீர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டிருந்த பொழுது மேற்படி துப்பாக்கி கூரைக்குள் கிடப்பதை தச்சன் தனக்குத் தெரியப்படுத்தியதாக பாசாலை அதிபர் எஸ். சபாரெத்தினம் தெரிவித்தார்.

உடனடியாக இந்த விடயம் கல்முனைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட துப்பாக்கி பழைமைபட்டுப் போயிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், இது பற்றி மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளனர்.