செய்திகள்

பாடசாலை மாணவியர்களுக்கான சுகாதார துவாய் வழங்கும் வேலைத்திட்டம்

பாடசாலை மாணவியர்களுக்கான சுகாதார துவாய் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மொத்தம் 04 மில்லியன் பேர் பாடசாலை மாணவர்களாக இருப்பதுடன், அவர்களில் 1.2 மில்லியன் மாணவிகள் பூப்படைந்தவர்களாக் கணக்கிடப்பட்டுள்ளது. குறித்த மாணவியர்களில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய பாடசாலைகள், அணுகல் வசதி குறைந்த பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் வறுமைப்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற 500,000 மாணவிகளுக்கு 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஆண்டுதோறும் சுகாதார துவாய் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

-(3)