பாடசாலை மாணவியை குரங்கு கடித்ததால் பாம்பாட்டி கைது
அட்டன் நகரில் பொது சந்தைக்கு அருகில் நேற்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் பாடசாலை மாணவியை குரங்கு கடித்த சம்பவம் தொடர்பாக இரண்டு பாம்பாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாம்பாட்டிகளுடன் இரண்டு குரங்குகள், இரண்டு பாம்புகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்த பாம்பாட்டிகள் அட்டன் பொது சந்தைக்கு அருகில் பாம்புகளையும் குரங்குகளையும் பயன்படுத்தி வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தனர்.
அப்போது அதன் அருகில் சென்ற பாடசாலை மாணவியை குரங்கு கடித்துள்ளது.
இது குறித்து அட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாம்பாட்டிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த இரண்டு பாம்பாட்டிகளை கடும் எச்சரிக்கைவிடுத்து அனுப்பியுள்ளதாக அட்டன் பொலிஸார் குறிப்பிட்டனர்.
11 வயதான குறித்த சிறுமி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.