செய்திகள்

பாண் விலை அதிகரிப்புக்கு எதிராக வழக்கு

பாண் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மீது வழக்கு தொடரப் போவதாக அகில இலங்கை சிற்றூண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மாவின் விலை 7ரூபா 20 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாணின் விலையை நேற்று நள்ளிரவு முதல் 4 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விலை அதிகரிப்பானது நுகர்வோரை சுரண்டும் செயற்பாடுகள் எனவும் இதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக அகில இலங்கை சிற்றூண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.