செய்திகள்

பாதசாரி கடவையை அகற்றுவது தொடர்பிலான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க நடவடிக்கை

கொழும்பு நகரின் குறிப்பிட்ட சில வீதிகளில் பாதசாரி கடவையை அகற்றுவது தொடர்பிலான அறிக்கை ஒன்றனை கொழும்பு மாநாகர சபைக்கு சமர்ப்பிக்க வீதி பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாரம் இதுவரை 55 வீதிகளிலுள்ள பாதசாரி கடவைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பாதசாரி கடவையில் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்ட போதே குறித்த, ஆபத்து மிக்க பாதசாரி கடவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொழும்பு மாநாகர சபையின் வேண்டுகோளுக்கு அமைய பாதசாரி கடவைகள் தொடர்பிலான அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் பல பிரதான வீதிகளிலும் ஆபத்துமிக்க பாதசாரி கடவைகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி, குருநாகல, அம்பாந்தோட்டை,கம்பஹா நுகேகொடை, ஆகிய நகரங்களிலும் உள்ள பாதசாரி கடவைகள் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

n10