செய்திகள்

பாதுகாப்புத் துறையிலும் நெருங்கிய உறவைப் பேண சீனா- சிறிலங்கா இணக்கம்

பாதுகாப்புத் துறையில் நெருக்கமான உறவுகளை பேணிக் கொள்வதற்கு சீனாவும் இலங்கையும் விருப்பம் தெரிவித்துள்ளன.

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே, இதுபற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விவகாரங்களில் இரண்டு நாடுகளும் தொடர்ந்தும் ஒத்துழைப்புடனும், இணைந்தும் செயற்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சோதனைமிக்க தருணங்களில் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்த சீனாவும் இலங்கையும்  எல்லாக் காலத்திலும். நட்புறவுடன் இருக்கும் என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

n10