செய்திகள்

பாதுகாப்பு வழங்கப்பட்ட பாதாள உலக நபர்களே லசந்தவை கொன்றனர்

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பாதாள உலக குழுவை சேர்ந்தவர்களினாலேயே கொல்லப்பட்டதாகவும் ஆனால் கொலையாளிகளுக்கு பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற வெளிநாட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே இதனை தெரிவித்த அவர் அந்த பாதுகாப்பு பிரிவு அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறினார்.