செய்திகள்

பாதுகாப்பு வேலியலிலிருந்து மனித கைவிரல் மீட்பு

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள பாதுகாப்பு வேலியிலிருந்து மனித கைவிரலொன்றை பொலிஸார் மீட்ட சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (20) நடைபெற்ற அசம்பாவித நிகழ்வின் போது, பொலிஸார் போட்டிருந்த பாதுகாப்பு வேலியை சிலர் தூக்கிச் சென்று நீதிமன்றத்தை நோக்கி எறிந்தனர். இதன்போதே, இந்த பாதுகாப்பு வேலியை தூக்கி எறிந்தவர்களில் ஒருவரின் கைவிரலொன்றே இவ்வாறு அதில் அகப்பட்டு அறுந்திருக்கலாம் என பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.