செய்திகள்

பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி மட்டக்களப்பு சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ( படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் அரசாங்க உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, அம் மாவட்ட சமுக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மண்டூரில் படுகொலை செய்யப்பட்ட நாவிதன்வெளி பிரதேசசெயலக சமுக சேவை அதிகாரியின் படுகொலையை கண்டித்தும் அதன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரியுமே, இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சியில் எமது பாதுகாப்பை உறுதி செய், குற்றவாளிகளை உடனடியாக கைது செய், எமது பாதுகாப்பை உறுப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

ஆர்பாட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரி கே.கிரிதரனிடம் ஆர்ப்பாட்டக்காரார்கள் கையளித்தனர்.

DSC_1047 DSC_1052 DSC_1057