செய்திகள்

பாதை திருத்தி தருமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

டயகம நகரத்தில் இருந்து சந்திரிகாமம் தோட்டத்துக்கு செல்லும் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதை 20 வருடங்களாக மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பகுதி மக்கள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இப்பாதையை செப்பனிட்டு தருமாறு மலையக அரசியல்வாதிகளிடம் அறிவித்த போதிலும் எவரும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பாதையை செய்து தருமாறு கூறி 15.05.2015 அன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை 300 இற்க்கும் மேற்ப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால் இப்பாதையில் வாகனங்கன் செல்ல முடியாமல் உள்ளது.

இதன் காரணமாக டயகம நகரத்தில் இருந்து இத்தோட்டத்துக்கு முச்சக்கரவண்டி செல்வதாக இருந்தால் 600 ரூபாய் தொடக்கம் 800 ரூபாய் வரை மக்களிடம் பெறப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இப்பாதையில் பஸ் சேவை இன்மையால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலமை உள்ளது.

எனவே இப்பாதையினை உடனடியாக செய்து தருமாறு கோரியே இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கருத்துக்களை கேட்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களை அழுத்தவும்.

Road Picketin Voice Cut (1) Road Picketin Voice Cut (2) Road Picketin Voice Cut (3) Road Picketin Voice Cut (4) Road Picketin Voice Cut (5) Road Picketin Voice Cut (6) Road Picketin Voice Cut (7)

Road Picketing (1)

Road Picketing (3)

Road Picketing (4)

Road Picketing (5)

Road Picketing (6)

Road Picketing (7)

Road Picketing (9)

Road Picketing (11)

Road Picketing (12)

Road Picketing (13)

Road Picketing (14)

Road Picketing (15)

Road Picketing (16)

Road Picketing (17)