செய்திகள்

பாப்பரசரிடம் நீதி கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் புனித பாப்பரசரரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வவுனியாவில் நேற்று காணாமல் போனோரின் உறவினர்களை ஒன்றிணைத்து வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த அமைதி முறையிலான ஆர்ப்பாட்ட போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் இறுதிப் போரில் காணாமல் போன தமது இரவினர்கள் பற்றிய தகவல்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமது பிள்ளைகளை விடுவிக்க ஆவண செய்யுமாறு கோரியும் பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தி நின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து அவர்கள் மடு திருத்தலத்திற்கான தமது பயணத்தை மேற்கொண்டனர். நாளை புனித பாப்பரசர் அங்கு விசேட வழிபாடு நடத்தவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்ட காணொளி 1 ஆர்ப்பாட்ட காணொளி 2

Vavuniya Proetst