செய்திகள்

பாம்பு சின்னத்தில் பொதுபல சேனா களமிறங்கும்

“பொது ஜன பெரமுன” (பௌத்த மக்கள் முன்னணி) என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் அந்த கட்சியூடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும்  பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி நாகப்பாம்பு சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தவுள்ளதாகவும் அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கட்சி எந்தவொரு கட்சியுடனும் இணையாது எனவும் தனித்தே போட்டியிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை விடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.