செய்திகள்

பாம்பு தீண்டி குடும்பப்பெண் மரணம்: ஏறாவூரில் சம்பவம்

மட்டக்களப்புஏறாவூர் பற்றுபிரதேசசெயலகப் பிரிவிற்குப்பட்டஈரளக்குளம் கிராமசேவகர் பிரிவில் விசப்பாம்புதீண்டிகுடும்பபெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகஏறாவூப் பொலிசார் தெரிவித்தனர்.

ஈரளக்குளம் பெரியவட்டவான் (சின்னதுரைமாரி) எனும் பிரதேசத்தில் வசிக்கும் கணேசமூர்த்தி மங்களம் (வயது 50) என்றஆறுபிள்ளைகளின் பெண்ணேஉயிரிழந்துள்ளதாகதெரிவித்தனர்.

நேற்று இரவுசுமார் 3மணியளவில்தனதுவீட்டில் வைத்துவிசப்பாம்புதீண்டியுள்ளதைஅறிந்ததும், இரவோடு இரவாகசந்தனமடுஆற்றுப்பாதையுடாக மாவடிவேம்பு பிரதேசவைத்தியசாலைக்குஅனுமதித்ததையடுத்து மேலதிகசிகிச்சைக்காகமட்டக்களப்புபோதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனளிக்காத நிலையில் சுமார் நேற்று இரவு 12 மணியளவில் குறித்தபெண் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்புபோதனாவைத்திசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகதெரிவித்தனர்.