செய்திகள்

பாராளுமன்றத்தில் இரவுமுழுவதும் தங்கியிருந்த எம்.பிக்கள் : கட்சி ஆதரவாளர்களும் போராட்டத்தை நடத்த திட்டம்

மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாணை ஆணைக்குழுவுக்கு கொண்டு செல்ல வேண்டாமென கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழுவொன்று நேற்று காலை முதல் அரம்பித்த சத்தியாக்கிரக பேராட்டம் நேற்று இரவும் தெடர்ந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இன்று காலை பாராளுமன்றத்திற்கு அருகில் பல்வேறு கட்சி ஆதரவாளர்கள் கூடி ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நேற்று இரவு முழுவதும் 40 ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. தமது கோரிக்கைகளுக்கு எழுத்து மூலமான உறுதி மொழி வழங்கப்படுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பகல் இரவாக எதிர்ப்பு நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்ட முதலாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
இதேவேளை 19வது திருத்தம் தொடர்பான விவாதத்தை இன்றைய தினம் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.