செய்திகள்

பாராளுமன்றத்தை இன்னும் ஒரு வருட காலத்திற்குக் கலைக்க வேண்டாம்: அருந்திக பேர்னான்டோ கோரிக்கை

பாராளுமன்றத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு கலைக்கவேண்டாம் எனக் கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பேர்னான்டோ கேட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்கத் தயாராக உள்ளோம் என்றும் மகிந்தராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்குத் தான் மக்கள் தீர்ப்பு வழங்கினார்கள் ஆனால் ஜனாதிபதி மட்டுமல்ல அரசே மாறிவிட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருந்த அரசு இன்று பொரும்பான்மைப் பலத்துடன் எதிர்க்கட்சியாக இருக்கிறது.

சிறுபான்மையாக உள்ள கட்சி இன்று பிரதமர் அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் என ஆட்சி புரிகிறது. இதனைப் பார்க்கும் போது வேடிக்கையாகத் தான் உள்ளது. தயது செய்து இப்பாராளுமன்றத்தை மூன்று மாத காலப்பகுதியில் கலைக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

பணம் வீண் விரையம். எனவே தயவு செய்து இப்பாராளுமன்றத்தை மூன்றுமாத காலத்தில் கலைத்து விடாது ஒரு வருடகாலத்திற்கு கொண்டுசெல்லுமாறு கோருகின்றேன். இந்த அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.