செய்திகள்

பாராளுமன்றத்தை உடன் கலையுங்கள்: அரசை வலியுறுத்துகின்றார் சோபித தேரர்

தற்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளு வாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டி ருந்தனர்.

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோர இந்த பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதியுடன் பேச வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்றுக் காலை கோட்டே நாக விகாரையில் கூடினர்.

அரசியல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித் துள்ளார். 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டு தேர்தலுக்கு செல்வது மிக சிறந்தது என தெரிவித்துள்ள அவர், இந்த சட்டத்தை நிறைவேற்றுவது இப்படியான சந்தர்ப்பத்தில் சிரமமான காரியம் எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகியதன் காரணமாகவே 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடிந்தது. 20 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற கிடைக்காது போனால் அதனை நிறைவேற்றாது தேர்தலுக்கு செல்ல நேரிடும்.

20வது திருத்தச் சட்டத்தை நிறை வேற்றுவதில் சிரமம் இருக்கும் என நான் கருதவில்லை. அதனை பாராளு மன்றத்திற்கு கொண்டு வருவதிலும் பாரதூரமான பிரச்சினைகள் எதுவுமில்லை. அரசாங்கத்தின் பெரும்பான்மை தொடர்பான பிரச்சினை உள்ளது, இதற் காகவே அவசரமான தேர்தல் ஒன்று தேவைப்படுகிறது என்றும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.