செய்திகள்

பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் : ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்து தேர்தலுக்கு செல்ல வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
நேற்று இரவு ஶ்ரீ கொத்தாவில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போதய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதனால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டுமெனவும் கட்சி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.