செய்திகள்

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது: 100 நாள் வேலைத்திட்டம் பற்றி ரணில் அறிவிப்பார்

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தையடுத்து இலங்கைப் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறுகின்றது. புதிய அரசாங்கம் தமது நூறு நாள் வேலைத்திட்டத்தில் என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய அமர்வின் போது அறிக்கையொன்றை  வெளியிடவுள்ளார்.

இவ்வருடத்துக்கான பாராளுமன்ற கன்னி அமர்வு, புதிய அரசாங்கத்தின் கீழ் கூடவுள்ள நிலையிலேயே பிரதமர் அறிக்கை வெளியிடவுள்ளார். அரசாங்கத்துக்கான பெரும்பான்மையை வெளிப்படுத்த வேண்டிய தேவையும் இதன்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.