செய்திகள்

பாராளுமன்றம் எவ்வேளையிலும் கலைக்கப்படலாம் வர்த்தமானி பத்திரம் தயார் நிலையில்

எதிர்வரும் நாட்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கக்கூடிய வகையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் பத்திரம் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினம் குறிப்பிடப்படாது அது தயாரிக்கப்பட்டுள்ளதுடன் கலைக்க வேண்டிய தருவாயில் தினத்தை அதில் குறிப்பிட்டு கையொப்பத்தையிட்டு எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதியினால் அது வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் நாட்களில் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கம் கலைக்கப்பட்டு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.