செய்திகள்

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

மத்திய வங்கி ஆளுனர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த யோசனையால் சபையில் ஏற்பட்ட அமைதியின்மையையடுத்து பாராளுமன்றம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி அளுனரை பதவி விலக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் சபையில் யோசனையொன்றை முன்வைத்து அதனை இன்றைய தினமே விவாதத்தை நடத்துமாறு கோரிய நிலையில் அதற்கு ஆளும் கட்சி இணங்காத்தையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது இரண்டு தடவைகள் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு மூன்றாவது தடவையாக கூடிய போதும் அமைதியேற்படவில்லை.. இதனையடுத்து பாராளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.