செய்திகள்

பாராளுமன்றம் கலைந்தாலும் அமைச்சரவை தொடர்ந்து செயற்படும்

பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ள போதும் பிரதமர் அடங்கலாக அமைச்சரவை கலையாது தேர்தல் வரை தொடரும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பின் 48வது உறுப்புரிமைக்கமைய அமைச்சரவை தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த உறுப்புரிமையின் படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சரவை தொடர்ந்து செயற்படும் என்பதுடன் தேர்தல் முடிந்ததும் அமைச்சரவையின் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி தற்போதைய பிரதமர் அடங்கலாக அமைச்சரவை தொடர்ந்தும் செயற்படுமென அவர்கள் தெரிவித்;துள்ளனர்.