செய்திகள்

பாராளுமன்றம் கலைய முன்னர் ஐ.ம.சு.கூவின் ஆட்சியை அமைப்போம் : தினேஷ் குணவர்தன

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  ஆட்சியை அமைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை பலம் எதிர்க்கட்சியின் வசமே  இருப்பதாகவும் இதன்படி விரைவில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கயைில்லா பிரேரணையை கொண்டு வந்து மீண்டும் தமது ஆட்சியை அமைப்போம் என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியை அமைக்க ஜனாதிபதி இணங்கும் பட்சத்தில் யாரை பிரதமராக நியமிப்பது என்பது தொடர்பாக அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.