செய்திகள்

பாராளுமன்றம் நாளை இரவு கலைக்கப்படும்?

நாளை புதன் கிழமை  இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20வது திருத்தத்திற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உட்பட அரசியல் கட்சிகளுக்கிடையே இன்னும் இணக்கப்பாடுகள் ஏற்படாதிருக்கும் நிலையில் பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள 20வது திருத்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை அரசாஙகம் கொண்டு வரவுள்ளது. இது தொடர்பான விவாதம் முடிந்த பின்னர் நாளை இரவு ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி 20வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமலே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.