செய்திகள்

பாராளுமன்றம் மரண வீடாக மாறிவிட்டது : அனுர குமார

பாராளுமன்றம் மரண வீடு போன்று மாறிவிட்டதாகவும்  தற்போது அங்கு அனுதாப பிரேரணைகள் தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தப்படுவதாகவும் ஜே.பி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது பாராளுமன்றத்தில் அனுதாப பிரேரணைகள் தொடர்பாக மாத்திரமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. எத்தனையோ முக்கிய விடயங்கள் இருக்கையில் அனுதாப பிரேரணை மட்டுமே கவனத்தில் எடுக்கப்படுகின்றது.இதன்படி பார்த்தால் பாராளுமனறம் இப்போ மரண வீடு போன்று மாறிவிட்டது.
அப்படி தொடரந்துஅனுதாப பிரேரணையை எடுப்பதென்றால் தொடர்ந்து எம்.பிக்களும் இறக்க வேண்டும். தற்போதைய நிலைமையை எண்ணி நான் கவலையடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.