செய்திகள்

பாராளுமன்றம் விரைவில் கலையும் : கயந்த கருணாதிலக்க

பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படுமென ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது எப்போது பாராளுமன்றம் கலைக்கப்படுமென ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் திருத்தமான 20வது திருத்தம் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இதனை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்படுமென அவர்  தெரிவித்துள்ளார்.