செய்திகள்

பாராளுமன்றம் 9 அல்லது 10ம் திகதி கலையும்?

எதிர்வரும் 9 அல்லது 10ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை திங்கட் கிழமை அமைச்சரவை அவசரமாக கூடி 20வது திருத்தம் தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றி 9ம் திகதி அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணையை எதிரணி கொண்டு வந்துள்ள நிலையில் சபையில் அதற்காக இடமளிக்காத வகையில் அரசாங்கம் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.