செய்திகள்

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க திஸ்ஸவுக்கு அனுமதி

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்போது அவற்றில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று, சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சபை அமர்வுகளில் கலந்துகொள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி இன்றைய பாராளுமன்ற அமர்பில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது