செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா வர சட்டம் இடம்கொடுக்குமா?

பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜெயந்த கெட்டகொட முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் சட்டப்பிரிவிடம் அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காணப்படும் சட்ட ஏற்பாடுகள் குறித்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி சட்டப்பிரிவினரிடம் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தால் அந்த வெற்றிடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படுவாரா என்று தேர்தல் ஆணையாளரிடம் கெட்டகொட கடித மூலம் கேட்டுள்ளார்.