செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிடம் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ​பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு வீட்டு திட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் டிரான் அலஸ் உள்ளிட்ட ஐவருக்கு வௌிநாடு செல்லத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதாக கூறி, ராடா என்ற நிறுவனத்தை நிறுவி நிதி மோசடியில் ஈடுட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.