செய்திகள்

பாராளுமன்ற கலைப்பு சில நாட்களில் அல்ல சில மணித்தியாலங்களில்: மங்கள சமரவீர

பாராளுமன்றம் சில நாட்களில் அல்ல சில மணித்தியாலங்களுக்குள் கலைக்கப்படும் என்று வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும் என்று வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, அதுபற்றி தனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை என்றும் ஜனாதிபதியும் கடவுளுமே அதனை அறிவர் என்றும் கூறினார்.

எவ்வாறெனினும், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் புதிய பாராளுமன்றம் அமையும் என்றும் அவர் கூறினார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=sl8HVoDVwzU” width=”500″ height=”300″]