செய்திகள்

பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிட மாட்டேன் : ஜனாதிபதி

பாராளுமன்ற செயற்பாடுகளில் தான் தலையிட மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சி பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் அதில் கலந்துக்கொண்ட கட்சி பிரதிநிதிகள் அரசாங்கத்தினால் 20வது திருத்தம் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டு விவாதம் நடத்துவதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதற்கு நீங்கள் எப்படி பிரதமரக்கு அனுமதி கொடுத்தீர்கள் என ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதன்போது நான் பாராளுமன்ற விடயத்தில் தலையிட மாட்டேன்  கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணங்கியதற்கு அமையவே அந்த விவாதம் நடைபெறுகின்றது. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லையென அவர் தெரிவித்துள்ளார்.